பச்சைப் பொய் சொல்லுன்றார் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர்.!
வலிகாமம் வடக்கில் - கடந்த 36 வருடங்களாக பொதுமக்களின் காணிகளை உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில். கையகப்படுத்தி வைத்திருக்கும் இராணுவத்தினர் அங்கு பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் விளை பொருட்களை திருநெல்வேலி, மருதனார்மடம். போன்ற பிரதான சந்தைகளில் அதிகாலை வேளை பலாலி இராணுவத்தினர் கொண்டு வந்து மொத்தமாக விற்பனை செய்துவிட்டுப் போவது அவர்களுடைய நாளாந்த கருமங்களில் ஒன்றாகும்.
அதுமட்டுமல்லாது தற்போது பலாலி வீதி, உரும்பிராய்ப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் Keells நிறுவனத்தின் மொத்த சேகரிப்பு நிலையத்தில் இராணுவத்தினர் நாளாந்தம் அதிகாலை வேளை வாகனத்தில் பெருந்தொகையில் மரக்கறி வகைகளைக் கொண்டு வந்து விற்பனை செய்துவிட்டுப் போவதை நாளாந்தம் காணக்கூடியதாக இருக்கிறது.
காங்கேசன்துறையில் இராணுவத்தினர் சோளம் விற்கிறார்கள். கடந்த வருடம் பலாலிச் சந்தியில் வெசாக் பண்டிகை கொண்டாடிய இராணுவத்தினர் மரக்கறி விற்பனைக் கடை அமைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்த காரியத்தை பிரதாப் பாதுகாப்பு அமைச்சர் அறியாரோ என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது இவ்வாறு இருக்கையில்,
பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேர பாராளுமன்றத்தில். நேற்றைய தினம் (09.07.2026) கூறும்போது -
இராணுவத்தினர் வியாபார பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை. எனவும், தமது சுய தேவைக்காகவே பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர் என்ற பச்சைப் பொய்யான கருத்தினை வெளியிட்டிருப்பது வலிகாமம் வடக்கு மக்களை ஏமாற்றும் செயலாகும்.
இது அவருடைய தனிப்பட்ட கருத்தா அல்லது அரசாங்கத்தின் கருத்தா என்பது குறித்து வலிகாமம் வடக்கு மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வலி.வடக்கில் - பலாலி, மயிலிட்டி மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கொழுத்தும் வெப்பத்துக்கு மத்தியில் அமைச்சரின் கருத்தூ விசனத்திற்குரியது.
"மக்களின் காணிகள் மக்களுக்கே" என்ற கோசத்துடன் ஆட்சியைப்பிடித்த தேசிய மக்கள் சக்தி அரசு மக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று கூறி வருகையில், பிரதிப் பாதுகாப்பு அமைச்சரின் மேற்படி கூற்றானது கண்டிக்கத்தக்கதும் மக்கள் மத்தியில் பெரும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை