கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய ஸ்பெயின் நாட்டுப் பிரஜை.!
சுமார் 110 மில்லியன் ரூபாய் பெறுமதியான 'கொக்கைன்' போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் இலங்கை சுங்க கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 79 வயதான ஸ்பெயின் நாட்டுப் #பிரஜை என அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
விவசாயப் பொறியியலாளரான இவர், கடந்த 22ஆம் திகதி சியரா லியோனிலிருந்து (Sierra Leone) அடிஸ் அபாபா மற்றும் தோஹா வழியாகக் கட்டார் எயார்வேஸுக்குச் சொந்தமான QR654 எனும் விமானத்தில் #கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த வேளை இவ் போதைப்பொருளுடன் சிக்கியுள்ளார்.
அவரின் பயணப் பையை விடுவிப்பதற்கு முன்னர், இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் அதனை எக்ஸ்-ரே (X-Ray) பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, சந்தேகத்திற்குரிய பொருட்கள் இருப்பது அவதானிக்கப்பட்டத்தை அடுத்து, மிகவும் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 'கொக்கைன்' பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அவற்றின் மொத்த எடை 2.198 கிலோகிராம் என்பதுடன், அதன் சந்தைப் பெறுமதி சுமார் 109.9 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் இலங்கை சுங்கம் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட கொக்கைன் போதைப்பொருளையும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#BreakingNews #SriLanka #LKA #Trending #Viral #Update #PublicNews #SriLankaNews #Colombo #LocalNews #LiveUpdates #Politics #செய்திகள் #SriLankaTamilNews #JaffnaNews

.jpeg
)





கருத்துகள் இல்லை