சீருடையில் ரீல்ஸ்.. கையில் துப்பாக்கி: உத்தரப் பிரதேசத்தில் காவலர்களுக்கு நேர்ந்த கதி!
உத்தரப் பிரதேசத்தின் ஜலவுனில் இருந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு சம்பவம் தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது. பணியில் இருக்க வேண்டிய நேரத்தில் ரீல்ஸ் வீடியோ எடுக்கச் சென்ற இரண்டு காவல்துறை அதிகாரிகளின் செயலே இதற்கு காரணம். காவலர் அரவிந்த் பட்டேல் மற்றும் ஒரு பெண் காவல்துறை அதிகாரி இந்த வைரல் ரீல்ஸின் முக்கிய கதாபாத்திரங்களாக உள்ளனர்.
ரீல்ஸ் எடுத்ததே ஒரு விஷயம் என்றாலும், அதில் அவர்கள் நடந்து கொண்ட விதம்தான் தற்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. காவலர் அரவிந்த் பட்டேல் அதிகாரப்பூர்வ காவல்துறை யூனிஃபார்மில் தோன்றியுள்ளார். அவருடன் இருந்த பெண் காவலர் நவீன ஆடையில் காட்சியளிக்கிறார். அதுமட்டுமல்லாமல், கையில் இருந்த சர்வீஸ் ரிவால்வரையும் பயன்படுத்தி வீடியோ எடுத்துள்ளனர். கவனக்குறைவால் துப்பாக்கி வெடித்திருந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கவலையும் எழுந்துள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, சம்பவம் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றது. விதிமுறைகளை மீறி ரீல்ஸ் எடுத்ததாகக் கூறி காவலர் அரவிந்த் பட்டேல் உடனடியாக பணியிடை நீக்கம் (சஸ்பென்ஷன்) செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில், வீடியோவில் இடம்பெற்றுள்ள பெண் காவல்துறை அதிகாரி மீதும் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. ரீல்ஸ் மூலம் புகழ் பெற நினைத்த காவலருக்கு இறுதியில் பெரிய சிக்கலே ஏற்பட்டது என்று சொல்லலாம்!

.jpeg
)





கருத்துகள் இல்லை