அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்..!
அமெரிக்க ராணுவம் ஈரானிய இலக்குகள் மீது நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இரு வல்லரசுகளுக்கும் இடையேயான மோதல் எந்நேரமும் முழு அளவிலான போராக மாறும் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது.
அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM), ஈரானின் பஸ்ஹெர் (Bushehr) அணுமின் நிலையப் பகுதி, சாபஹார், பந்தார் அப்பாஸ் ஆகிய முக்கிய துறைமுக நகரங்கள் மற்றும் இராணுவத் தளங்கள் உட்பட சுமார் 90 இலக்குகள் மீது கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, #ஈரான் தனது ஏவுகணைகளை அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள அண்டை நாடுகளான பஹ்ரைன் (அமெரிக்க 5-வது கடற்படைத் தலைமையகம் உள்ள இடம்), குவைத், கத்தார் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளை நோக்கி வீசிப் பதிலடி கொடுத்துள்ளது. இதனால் அந்த நாடுகளிலும் #போர் அபாய சைரன்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
இந்த இருநாட்கள் அமெரிக்கத் #தாக்குதலில் இதுவரை 14 பேர் #உயிரிழந்துள்ளனர் மற்றும் 78 பேர் காயமடைந்துள்ளனர் என ஈரானிய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
அண்மையில் போடப்பட்டிருந்த தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் (Ceasefire) முற்றிலும் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து இங்கு போர் பதற்றம் இடம்பெற்றுவருகிறது.
#Iran #USA #USIran #MiddleEast #BreakingNews #WorldNews #MissileAttack #DroneAttack #CENTCOM #IranNews #USMilitary #WarNews #Geopolitics #LatestNews #InternationalNews

.jpeg
)





கருத்துகள் இல்லை