குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் பலி!
யாழில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். இதன்போது 10ஆம் வட்டாரம், புங்குடுத்வைச் சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் (வயது 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் புங்குடுதீவு காட்டுக்குள் நேற்றையதினம் பனை வெட்டுவதற்காக சென்றுள்ளார். இதன்போது கருக்குளவி இவர்மீது கொட்டியது. இந்நிலையில் அவரது மகன் அவரை புங்குடுதீவு வைத்தியசாலையில் சேர்ப்பித்தார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை