தமிழரசு கட்சி மூத்த உறுப்பினருக்கு அஞ்சலி!!

 



திருகோணமலை மாவட்டத்தின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரான இராஜமணியின் இறுதி அஞ்சலி நிகழ்வில், திருகோணமலை மாவட்டக் கிளையின் உப தலைவர் விஜயநாதம் விஜயகுமார் கலந்து கொண்டு தனது இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளார்.


அவருடைய மறைவு திருகோணமலை மாவட்டத்திற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

தமிழ் மக்களின் அரசியல், சமூக மற்றும் பொது சேவைக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இராஜமணியின் சேவைகள் என்றும் மக்களின் நினைவில் நிலைத்திருக்கும்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கட்சித் தோழர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், கட்சிப் பிரமுகர் குமார் ஜெயக்குமாரன், மாவட்ட மற்றும் பிரதேசக் கட்சி நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மறைந்த இராஜமணிக்கு தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தியள்ளனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.