சிக்கினார் கோட்டபாய!!

 


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அசாத் மௌலானாவைத் தனக்குத் தெரியாது என்று நீதிமன்றத்தில் கூறிய போதிலும், அதற்கான ஆதாரங்களை சட்டமாதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னதாக, கோட்டாபய ராஜபக்ச தனது மிரிகான இல்லத்திற்கு இனியபாரதி, அசாத் மௌலானா, மற்றும் பிள்ளையான் தரப்பினரை அழைத்ததாகக் கூறப்படும் தகவல்கள் மற்றும் காணொளி ஆதாரங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம் மற்றும் நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இந்த வழக்குகள் குறித்து, பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் கோரியுள்ளனர்.

இறுதியாக, இனியபாரதி வழங்கியுள்ள தகவல்கள் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட பலருக்குப் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் விசாரணைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படப்போகின்றன என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இனியபாரதி ஒரு முக்கிய சாட்சியாகக் கருதப்படுவதற்கு, அவர் நீதிமன்றத்தில் வழங்கிய வாக்குமூலங்களே காரணம் எனலாம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிகான இல்லத்தில் இடம்பெற்ற இரகசிய சந்திப்பு குறித்த தகவல்களை இனியபாரதி வெளிப்படுத்தியுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.