வெள்ளத்தில் உருண்டு வந்த எரிவாயு சிலிண்டர்கள்!!
மேற்கு இந்தியாவில் பெய்து வரும் கனமழை மற்றும் கடுமையான வெள்ளப் பெருக்கில், ஆயிரக்கணக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் போர் காரணமாக சமீபகாலமாக நாட்டில் கடுமையான எரிவாயு தட்டுப்பாடு நிலவி வந்த சூழலில், இந்த சிலிண்டர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தீவிரமான வெள்ளப் பெருக்கின்போது, சீறிப்பாய்ந்து வந்த ஆற்று வெள்ளத்தில் மிதந்து வந்த சிலிண்டர்களை, அப்பகுதி மக்கள் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் இறங்கிப் போராடி மீட்டெடுத்து வருகின்றனர்.
இது குறித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரவி வருகின்றன.

.jpeg
)





கருத்துகள் இல்லை