காணி சுவீகரிப்புக்கு எதிராக ஒன்றுதிரளுமாறு அழைப்பு!!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் இன்றும் ( புதன்கிழமை ) நாளையும் (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்று திரளுமாறும், காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது
மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும், மமக்களின் காணிகளை அபகரிப்பதை ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இந்த அரசாங்கமும் மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் இதுவரை எந்தக் காணிகளும் விடுவிக்கப்படவில்லை. மக்களின் காணிகளை மக்களிற்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் இதற்காக மருதங்கேணியில் அளவீடு செய்யப்படுகின்ற காணியை அளவீடு செய்யவிடாமல் தடுப்பதற்காக அனைவரும் ஒன்று திரளுமாறும் கோரிக்கை விடுத்தார்

.jpeg
)





கருத்துகள் இல்லை