கடற்கரைக்கு வந்த அம்மன்சிலை!!



யாழ். பலாலி வளலாய்க் கடலில் அம்மனின் திருவுருவச் சிலை ஒன்று நேற்றையதினம் திடீரெனக் கரை ஒதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மிகவும் புராதனமாக காணப்படும் அம்மன் சிலை ஒன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.

இவ்வாறு கடற்கரையில் அம்மன் சிலை கரையொதுங்கியுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அம்மன் சிலையானது எங்கிருந்து வந்தது என்பது தொடர்பிலான தகவல் எதுவும்   இதுவரை வெளியாகவில்லை.     

நீண்ட நாட்கள் கடலுக்குள் இருந்ததால் சிலையின் சில பகுதிகளில் கடற்பாசிகளும் படிவங்களும் காணப்படுகின்றன. அம்மன் சிலை கரையொதுங்கிய தகவலறிந்து  நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டு, 

 கரை ஒதுங்கிய அம்மன் சிலைக்கு  புனித நீர் ஊற்றித் தூய்மை செய்து, சிறப்பு வழிபாடுகளும் பூசைகளும் செய்துள்ளனர்.

இந் நிலையில் பல தசாப்தங்களாக உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் (HSZ) இருந்து, அண்மைக் காலத்தில் மக்கள் வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் பூர்விக வரலாற்றோடு இதற்கு ஏதேனும் தொடர்பிருக்குமோ எங்கிற ஐயப்பாடும் பிரதேச மக்களுக்கு எழுந்துள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.