யாழில் இளைஞன் கடத்தல்!!

  



வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் நனதெரியவருவது, யாழ். இந்துக் கல்லூரிக்கு அண்மையில் கடந்த 5 ஆம் திகதி ஒரு இளைஞனை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்திச் சென்று சித்திரவதை செய்து பின்னர் விடுவித்துச் சென்றுள்ளனர். 

இவ்வாறு செல்லும் போதே, பொலிசார் சந்தேகத்தின் பெயரில் இவர்களைக் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 2.5 கிராம்  ஐஸ் போதையும் மீட்கப்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.