மகஸின் சிறையில் மோதல்!!

 



கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் மோதல் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குறித்த சம்பவம் இன்று (10.07.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. 

இதன்போது சிறையில் உள்ள ஐந்து கைதிகளுக்கிடையே மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் 

இந்த மோதலில் காயமடைந்த இரண்டு கைதிகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

எனினும் இந்த மோதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.