வெப்ப அலையில் தவிக்கும் வெளிநாடுகள்!!

 




ஐரோப்பியக் கண்டம் முழுவதும் நிலவி வரும் வரலாறு காணாத கடும் வெப்ப அலை, வரண்ட காலநிலை மற்றும் பலத்த காற்று காரணமாகப் பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் காட்டுத்தீ தீவிரமடைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஐரோப்பிய ஒன்றிய வரலாற்றிலேயே இந்த ஆண்டின் காட்டுத்தீச் சேதங்கள் முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளன.

உலகிலேயே மிக வேகமாக வெப்பமடைந்து வரும் கண்டமாக ஐரோப்பா மாறியுள்ளதாகக் காலநிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கிரீஸ் நாட்டின் கிரீட் தீவில் பரவிய காட்டுத்தீக்கு இடையே சிக்கி மூன்று தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

தீ வேகமாகப் பரவி வருவதால், அங்குள்ள சுற்றுலாத் தலங்களில் இருந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் படகுகள் மூலமாகவும் நிலவழியாகவும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.