மலேசியாவில் இரண்டு குற்றவாளிகள் கைது!!
மலேசியாவில் கைது செய்யப்பட்ட இரத்மலானை சைமா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி, கஞ்சிபானி இம்ரானின் நிதி விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தவர் என பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், கெஹல்பத்தாரா பத்மே மலேசியாவில் பதுங்கியிருக்கவும் அவர் உதவியதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மலேசிய பொலிஸாருடன் இணைந்து நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையில், தனுஷ்க கௌசல்யா என்ற இரத்மலானை சைமா உட்பட மூன்று பேரை இலங்கை பொலிஸார் குழு ஒன்று அண்மையில் கைது செய்துள்ளது.
இது தொடர்பான விசாரணையில், கஞ்சிபானி இம்ரான் என்ற குற்றவாளியின் அனைத்து நிதி விவகாரங்களையும் அவரே கையாண்டது தெரியவந்துள்ளது.
சைமா என்ற சந்தேக நபர், கஞ்சிபானி இம்ரானின் சமூக ஊடக நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருந்துள்ளார்.
இதற்கமைய, அவரது குரல் பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்கும் அவரே பொறுப்பு என்பது தெரியவந்துள்ளது.
கஞ்சிபானி இம்ரானின் ஆலோசனையின் பேரில், கடந்த ஆண்டு கெஹல்பத்தாரா பத்மே மலேசியாவில் பதுங்கியிருக்க அவர் வழிவகுத்துள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது பிரான்சில் தலைமறைவாக உள்ள குடு அஞ்சுவின் நெருங்கிய நண்பராகவும் அவர் சில காலமாக இருந்து வந்ததாகவும், பின்னர் கஞ்சிபானி இம்ரானுடன் கைகோர்த்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சைமாவைக் கொல்ல குடு அஞ்சு திட்டமிட்டிருந்த நிலையில், கஞ்சிபானி இம்ரான் அதுபற்றி சைமாவிடம் தெரிவித்த பின்னர், அவர் கஞ்சிபானி இம்ரானுடன் நட்பு கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர், அவர் மலேசியாவிற்குத் தப்பிச் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை