கற்றாளை வளர்த்தவர்கள் கைது!!




 கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கரையான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்ணகி புறம் பகுதியின் அரச காட்டுக்குள் அத்துமீறி கற்றாழை செய்கையில் ஈடுபட்டதுடன் அனுமதியின்றி கட்டடம் அமைத்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


அரசிற்கு சொந்தமான குறித்த பகுதி தொடர்பாக நீதிமன்ற வழக்கு நடைபெற்று வரும் நிலையில் எவரும் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், அத்துமீறி கட்டட அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பாக வனவள திணைக்களத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது, அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்ததன் காரணமாக சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்படுள்ளனர். 

இதனை அடுத்து 09 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கரையான் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.