தமிழகம் சென்ற இருவர் கைது!!




 தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் சட்ட விரோதமான முறையில் ஊடுருவிய இலங்கையர்கள் இருவரை இராமேஸ்வரம் மரைன் பொலிசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


குறித்த கைது நடவடிக்கையானது இன்று(24.07.2026) அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் - மரைன் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்குச் சென்று பார்த்த போது இலங்கையைச் சேர்ந்த இருவர் வந்திருந்தது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த மரைன் பொலிசார் இராமேஸ்வரம் மரைன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை - வட்டாலை பகுதியைச் சேர்ந்த லூசிநந்த்(30) மற்றும் கம்பஹா பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன்(31) ஆகியோர் என மரைன் பொலிசார் நடத்திய முதல் கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது

மேலும், இவர்கள் இருவரும் நேற்று(23) இரவு மன்னார் - பேசாலை கடற்கரையில் இருந்து 3 இலட்ச ரூபா பணம் கொடுத்து படகு ஒன்றில் புறப்பட்டு இன்று(24) அதிகாலை சுமார் 4 மணி அளவில் தனுஷ்கோடி - கம்பிப்பாடு கடற்கரையில் வந்து இறங்கியதாக தெரிவித்துள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.