பயந்தனில் காந்தன் முன்பள்ளி புனரமைப்பு நிகழ்வு!!

  


கிளிநெச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன், குமரபுரம்  கிராமத்தில் அமைந்துள்ள காந்தன் முன்பள்ளியின் புதிய கட்டடத் தொகுதி திறப்பு விழாவும், 2026ஆம் ஆண்டுக்கான மழழைகள் மகிழ் நிகழ்வும் கடந்த செவ்வாய்க்கிழமை (28) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில், காந்தன் முன்பள்ளி மழழைகளின் பாண்ட் வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.



கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் முரளிதரன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, புதிய கட்டடத் தொகுதியைத் திரைநீக்கம் செய்து வைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி வடக்கு வலயக் கல்வி அலுவலகத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் அ. க. சிவனருள்ராஜா மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இப்புதிய கட்டடத் தொகுதியானது பல்வேறு தரப்பினரின் நிதிப் பங்களிப்புடன் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பினரின் கூட்டு முயற்சியால் உருவான இந்த புதிய கட்டடம், அப்பகுதி மழழைகளின் கல்வி வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையவுள்ளது.

இந்நிகழ்வில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.