பட்டாம்பூச்சிக்கு ஒரு மடல்- கோபிகை!!




 அழகாய் 

இதழ் விரித்திருந்த

ஒரு பட்டாம்பூச்சியை

என் கைகளுக்குள்

 ப(வி)த்திரமாய்

 பொத்தி வைத்திருந்தேன்.


அதன் 

அழகிய வண்ணங்கள் மீது

தீராத நேசமிருந்தது எனக்கு. 

அப்படியும் இப்படியுமாய்

அது அசையும்போதெல்லாம் 

சிலிர்த்து விடுவேன் நான்.

,கூடாக இருந்த என் கைகள் 

ஒரு நாள்

சிறையாயிற்று அதற்கு.


பனி விரித்த பொழுதொன்றில்

குளிர்ந்து கிடந்த

அதன் இறகுகளுக்கு

 என் கைகளின் 

கதகதப்பு தேவைப்பட்டது.

இப்போது 

சூடு கண்ட 

அதன் உடலுக்கு 

இந்த கதகதப்பு

ஒரு பொருட்டேயில்லை.


காலம் 

என் கைகளில் இருந்து 

பிடுங்கிச் சென்ற

 பட்டாம்பூச்சி

இப்போது 

வானத்தை அளக்கிறது.

அது என்னோடிருப்பதிலல்ல

மகிழ்வோடிருப்பதிலதான்

 எனக்கும் மகிழ்ச்சி....


பிடித்திருக்கிறது என்பதற்காக

பிடித்தே வைக்காமல்

பிடித்தபடி பறந்து செல் என்று 

பிடியை விட்டுவிட்டேன்...


போ...

என் அழகிய பட்டாம்பூச்சியே!

உன் கனவுகள்

 உன் ஆசைகள் 

உன் வாழ்க்கை -யாவும்

உனக்கானது..



உன் மகிழ்ச்சி 

என் நெகிழ்ச்சி....


போ...

உன் பாதை எதுவோ

அதில் நீ 

பயணப்பட்டு போ.....


காலம் உனக்காய்

கதவுகள் திறக்கட்டும் 

ஞாலம் உனக்காய்

புது விதி எழுதட்டும்...





கோபிகை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.