நீதி அமைச்சர் பதவி விலக வேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் நாமல்!!

 



நீர்கொழும்பு சிறைச்சாலையில் முதல் நாள் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அதிகாரிகள் முறையாகக் கட்டுப்படுத்தியிருந்தால், இரண்டாம் நாள் பாரிய மோதல் ஒன்று ஏற்பட்டிருக்காது.

இந்த வன்முறை தீவிரமடைவதற்கான சூழலை அரசே திட்டமிட்டு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(07.07.2026) இடம்பெற்ற தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.