தண்டவாளத்தில் உறங்கிய முதியவர் படுகாயம்!!




 மதுபோதையில் தொடருந்து தண்டவாளத்தில் கால்களை வைத்து உறங்கிக் கொண்டிருந்த முதியவர் ஒருவர், தொடருந்தில் அடிபட்டு படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் நேற்று இரவு(26.07.2026) இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து இரவு 7.40 மணிக்குக் கொழும்பு நோக்கிப் புறப்பட்ட தொடருந்து பயணப்பட்டுக்கொண்டிருந்தபோதே, தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த நபர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதில் படுகாயமடைந்தவர் 65 வயதுடைய எம்.ராஸிக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் உடனடியாக மீட்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.