ஜனாதிபதி மாளிகை தொடர்பில் வெளியான தகவல்!!!

 



தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி மாளிகைகளை பயன்படுத்தாத போதிலும் அதனை வேறும் நபர்கள் பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கடந்த 2025 ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் ஜனாதிபதி அறுர தங்கவில்லை என்ற போதிலும், அவற்றில் பெரும்பாலானவற்றில் பல்வேறு நபர்கள் தங்கியிருந்ததாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2025ம் ஆண்டில் இவ்வாறு ஜனாதிபதி மாளிகைகளில் 3,089 பேர் தங்கியுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில், இக்காலப்பகுதியில் நடத்தப்பட்ட கூட்டங்களின் எண்ணிக்கை 3 ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் காணப்படும் 7 ஜனாதிபதி மாளிகைகளது மின்சாரம், தொலைபேசி உள்ளிட்ட ஏனைய வசதிகளுக்காக அந்த ஆண்டில் 32,982,675 ரூபா செலவிடப்பட்டுள்ளது.

கதிர்காமம், மஹியங்கனை மற்றும் பெந்தோட்டை மாளிகைகளில் 2025 ஆம் ஆண்டில் எந்தவொரு கூட்டமோ அல்லது தங்குதலோ இடம்பெறவில்லை என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், 2025 ஆம் ஆண்டில் தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட ஏனைய செலவுகளுக்காக ரூபா 2,447,754 செலவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கென ஒதுக்கப்பட்ட 7 மாளிகைகள் கொழும்பு கோட்டை, கண்டி, அனுராதபுரம், கதிர்காமம், மஹியங்கனை, நுவரெலியா மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் காலத்திலுயே ஜனாதிபதி மாளிகைகளை பயன்படுத்தப் போவதில்லை என தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருந்த நபர்கள் யார் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.