நகை அடகு வைக்கும் வீதம் அதிகரிப்பு!!
இலங்கை மக்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் அளவு சுமார் ரூ. 351.45 பில்லியனாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளியியல் திணைக்களப் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இவை சதவீத அடிப்படையில் இது சுமார் 54 சதவிகித அதிகரிப்பு என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2024 ஆம் ஆண்டில், நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் அளவு ரூ. 660 பில்லியனாக இருந்துள்ளதாக பேராசிரியர் கூறியுள்ளார்

.jpeg
)





கருத்துகள் இல்லை