ஆசிரியப்பணியே அறப்பணி!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமத்தில் அமைந்திருந்த ஒரு சிறிய தமிழ்ப் பாடசாலை......
அதன் தரம் 06 வகுப்பறையின் கடைசி மூலையில் எப்போதும் தனிமையாக ஒரு சிறுவன் அமர்ந்திருப்பான்.....
அவன் பெயர் விமல்.....
அவனது சட்டை எப்போதும் அழுக்காக இருக்கும் காற்சட்டை பல இடங்களில் கிழிந்திருக்கும் காலில் செருப்பு இல்லை தலைமுடி வாரப்படாததால் சிதறிக்கிடக்கும் அவன் அருகில் சென்றாலே சில மாணவர்கள் மூக்கைப் பொத்திக்கொள்வார்கள்.........
அவனிடம் போகாதே...
அவன் குளிக்க மாட்டான்...
அவனோட இருக்காதே...
என்று கிசுகிசுப்பார்கள்
சில ஆசிரியர்களுக்குக்கூட அவன் மீது வெறுப்பே இருந்தது
நாளைக்கு சுத்தமா வரணும்
உடுப்பை தோய்த்து போட்டுட்டு வா
இப்படி வந்தா வகுப்புக்குள்ள விடமாட்டேன்.....
என்று பலமுறை திட்டியிருந்தார்கள்
ஆனால் யாரும் ஒருநாள்கூட
ஏன் இப்படியிருக்கிறாய்?
என்று கேட்டதில்லை......
விமலுக்கு ஒரு அழகான மனம் இருந்தது
தனக்குக் கிடைக்கும் சிறிய உணவைக்கூட நண்பர்களுடன் பகிர்ந்து உண்ண முயற்சிப்பான்.......
யாராவது கீழே விழுந்தால் முதலில் ஓடிச்சென்று தூக்குவான்......
யாராவது அழுதால் முதலில் ஆறுதல் சொல்வான்.....
ஆனால்...
அவன் நீட்டிய உணவை வாங்கி உண்ண யாரும் முன்வரவில்லை.....🥺
அவனது அன்பை ஏற்க அந்த சமூகம் தயாராக இல்லை.....😔
இரண்டாம் தவணையின் முதல் நாள்
பாடசாலைக்கு புதிய விஞ்ஞான ஆசிரியையாக மாலதி ஆசிரியர் பணியேற்றார்.....
அவர் வகுப்பறைக்குள் நுழைந்தார்.....
அனைத்து மாணவர்களும் மகிழ்ச்சியுடன் எழுந்து வணக்கம் கூறினர்.....
ஆனால்...
கடைசி மூலையில் தனியாகத் தலைகுனிந்து அமர்ந்திருந்த அந்தச் சிறுவன் மட்டும் அவரது பார்வையை ஈர்த்தான்.....
மாலதி ஆசிரியர் மெதுவாக அவனருகே சென்றார்......
தம்பி... உன் பெயர் என்ன?
ஏன் தனியா இருக்கிறே?
விமலின் உதடுகள் திறக்கவில்லை🥺
ஆனால்...
அவன் கண்கள் பேசின....
அந்தக் கண்களில் ஆண்டுகால வலி தேங்கியிருந்தது.....🥺
அப்போது வகுப்பின் நடுவிலிருந்து ஒரு குரல்...
ரீச்சர்... இவன் குளிக்கிறதே இல்லை அதனால்தான் யாரும் இவனோட இருக்க மாட்டாங்க.....
உடனே வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி....😁
மாலதி ஆசிரியரின் முகம் சிவந்தது.
SHUT UP!🤫
என்ற அவரது உரத்த குரலில் முழு வகுப்பும் அமைதியானது....
சில நொடிகள்...
அவர் விமலை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தார்.....
அவரது கண்களில் கண்ணீர் துளிர்த்தது....🥺🥺😔
அன்றைய மாலை
தனது தந்தையுடன் விமலின் வீட்டிற்குச் சென்றார்.....
போரின் காயங்களை இன்னும் சுமந்துகொண்டிருந்த அந்தக் கிராமத்தில் ஓலைகளால் மூடப்பட்ட சிறிய குடிசை.....
முற்றத்தில் கிழிந்த காற்சட்டையுடன் விமல் நின்றிருந்தான்.....
அம்மம்மா... ரீச்சர் வந்திருக்காங்க...
என்று குழந்தைத்தனமான மகிழ்ச்சியுடன் உள்ளே ஓடினான்.....
உள்ளே...
புகை நிரம்பிய அடுப்பில் கச்சான் வறுத்துக்கொண்டிருந்த வயதான பாட்டி
அவள் பதறி கச்சானை கீழே இறக்கிவிட்டு கைகளில் இருந்த புகைக்கரியைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.....
வாங்க ரீச்சர்...
என்று பழைய ஓலைப்பாயை விரித்தாள்....
மாலதி ஆசிரியரின் குரல் நடுங்கியது
அம்மா... விமலின் அம்மா அப்பா...
அந்தக் கேள்வியைக் கேட்டவுடன் பாட்டியின் கண்கள் நிரம்பின.....🥺
யுத்தத்தில... ரெண்டு பேரும் போய்ச் சேர்ந்திட்டாங்கம்மா...
இந்த ஒரு ஜீவன்தான் என்கிட்ட இருக்கு...
எனக்கும் வயசு ஆகிடுச்சு...
கச்சான் வறுத்து விற்று கிடைக்கிற காசுல... கஞ்சிய குடிச்சு இருவரும் உயிரோட இருக்கிறம்...
என்று சொல்லிக்கொண்டே கதறி அழுதாள்....🥺
அந்த வீடு முழுவதும் அமைதி...
பேச வார்த்தைகளே இல்லை....
மாலதி ஆசிரியரின் கண்ணீர்தான் பதிலாக வழிந்தது.....🥺
புறப்படும்போது...
பாட்டி ஓடிவந்து
வீட்டுக்கு வந்தனீங்க... ஒன்றும் குடிக்காம போறீங்களே...
தேத்தண்ணி வைத்து தருறன்... கொஞ்சம் இருங்கம்மா...
என்று கெஞ்சினாள்....
மாலதி ஆசிரியர் அவளது கையைப் பிடித்து
இன்னொரு நாள் கண்டிப்பா வருவன் அம்மா...
என்று கூறிவிட்டு வெளியேறினார்
வழியில்...
ஒரு துணிக்கடை
அப்பா... வண்டியை நிறுத்துங்க
அவர் வேகமாக இறங்கினார்
சிறிய சட்டை...
நீல நிற காற்சட்டை...
உள்ளாடை...
துவாய்...
சோப்பு...
சவர்க்காரம்...
சீப்பு...
எல்லாம் வாங்கினார்
மறுநாள்
சூரியன் உதிப்பதற்கு முன்பே பள்ளிக்குச் சென்றார்....
அதிபரிடம் அனுமதி பெற்றார்....
விமலை அழைத்தார்....
அவன் பயத்தோடு நின்றான்
வா தம்பி...
என்று கைபிடித்துக் கொண்டு சென்றார்
சவர்க்காரம் பூசி...
தலையை கழுவி...
நகங்களை வெட்டி...
புதிய ஆடையை அணிவித்தார்
அந்தச் சிறுவன் கண்ணாடியில் தன்னையே பார்த்து நின்றான்
அவனது கண்கள் மெதுவாக நனைந்தன
பல ஆண்டுகளுக்குப் பிறகு...
தனது தாயின் முகத்தைப் பார்த்ததுபோல்...
மாலதி ஆசிரியரைப் பார்த்துக்கொண்டே அழுதான்....🥺
அந்தக் கண்ணீரில்...
நன்றியும்...
அன்பும்...
இழந்த தாயின் ஏக்கமும்...
எல்லாம் கலந்திருந்தது....
மாலதி ஆசிரியரும் அவனை அணைத்துக்கொண்டார்...
இனிமேல் நீ என் பையன்...
என்றார்.....
அதன் பிறகு...
விமலின் வாழ்க்கையே மாறியது
அவன் ஒழுக்கமாகப் படிக்கத் தொடங்கினான்
மிகச் சுத்தமாக பள்ளிக்கு வந்தான்
விஞ்ஞானம் அவனுக்கு மிகவும் பிடித்த பாடமாகியது
ஒவ்வொரு தேர்விலும் முதலிடம்
ஒருகாலத்தில் அருகில் அமர மறுத்த மாணவர்களே இப்போது அவனுடன் அமரப் போட்டியிட்டனர்
காலம் வேகமாக ஓடியது
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை
6A, 2C, 1S
உயர்தரத்தில் உயிரியல் பிரிவு
B, C, S
பல்கலைக்கழகப் பட்டம்
ஆசிரியர் பயிற்சி
இன்று...
அவன் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞான ஆசிரியர்
ஒருநாள்...
அதே பாடசாலையில் அவனுக்குப் பாராட்டு விழா....
மேடையில் நின்று பேசும்போது...
அவன் கூட்டத்தைப் பார்க்கவில்லை.
ஒரே ஒருவரை மட்டும் பார்த்தான்....
முதல் வரிசையில் வெள்ளைச் சேலையில் அமைதியாக அமர்ந்திருந்த மாலதி ஆசிரியரை....
மேடையிலிருந்து இறங்கி...
அவளது காலில் விழுந்து அழுதான்....
அம்மா...
அந்த ஒரு வார்த்தை...
அந்த மண்டபத்தில் இருந்த அனைவரின் கண்களையும் குளமாக்கியது....
மாலதி ஆசிரியர் அவனை எழுப்பி அணைத்துக்கொண்டார்....
நான் ஒரு மாணவனை மட்டும் காப்பாற்றல...
ஒரு வாழ்க்கையை காப்பாற்றினேன்...
என்றார்....
அன்று...
அந்தப் பாடசாலையின் ஆசிரியர்கள் தங்கள் தவறை உணர்ந்தனர்....
ஒரு குழந்தையின் அழுக்கான உடையை மட்டுமே பார்த்திருந்தோம்...
அதன் பின்னால் அழுதுகொண்டிருந்த இதயத்தைப் பார்க்கத் தவறிவிட்டோம் என்று வருந்தினர்.....
அன்றிலிருந்து அவர்கள் ஒவ்வொரு மாணவனையும் அன்புடன் அணுகத் தொடங்கினர்.....
இன்றும்...
எத்தனையோ வகுப்பறைகளின் கடைசி இருக்கைகளில்...
விமல் போன்ற குழந்தைகள் அமர்ந்திருக்கிறார்கள்....
அவர்களுக்கு தேவையானது திட்டும் வார்த்தைகள் அல்ல...
ஒரு அன்பான பார்வை....
ஒரு கரம்....
ஒரு என்னாச்சு? என்ற கேள்வி
அந்தக் கேள்வியே...
ஒரு வாழ்க்கையை மாற்றும்....
ஆசிரியப்பணியே அறப்பணி... அதற்கே உன்னை அர்ப்பணி....

.jpeg
)





கருத்துகள் இல்லை