வல்வெட்டித்துறை விவசாய அமைப்புகளைச் சந்தித்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!!

 




​யாழ்ப்பாணம்  வல்வெட்டித்துறை, கொம்மந்தறை சனசமூக நிலையத்தில் வல்வெட்டித்துறை விவசாய அமைப்புகளுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்குமிடையில் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.



விவசாய சம்மேளனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த குறித்த சந்திப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும்  விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடையில்  விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடினர்.



இதில் புகையிலைச் செய்கை தடையிலிருந்து முழுமையாக மீள 3 - 4 வருட கால அவகாசம் வழங்கப்பட வேண்டும், புகையிலைக்குப் பதிலாகச் சிறந்த மாற்றுப் பயிர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்,  என்றும் 

மாற்றுப் பயிராகச் சின்ன வெங்காயத்தைப் பயிரிட்டு சந்தைக்குக் கொண்டுவரும் வேளையில், அரசாங்கம் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதால் ஏற்படும் நஷ்டத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

பதிலளித்த  நாடாளுமன்ற உறுப்பினர் விவசாயிகளின் பிரச்சினையை எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் முன்வைக்கவுள்ளதாகவும்,  விசேட பிரேரணை ஒன்றையும் கொண்டுவரஉள்ளதாகவும் உறுதியளித்தார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.