நேர்மைக்கு எடுத்துக்காட்டாக மாணவியின் செயல்!
ATM-இல் கிடந்த ரூ.15,000 பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்த உயர்தர மாணவி
அக்கரப்பத்தனை பகுதியில் ATM இயந்திரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த ரூ.15,000 பணத்தை கண்டெடுத்த உயர்தர மாணவி ஒருவர், அதனை அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து உரியவரிடம் சேர்த்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள குறித்த மாணவி, பணம் எடுப்பதற்காக ATM இயந்திரத்திற்குச் சென்றபோது, அங்கு பணம் விட்டுச் செல்லப்பட்டிருப்பதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த பணத்தை தனது வசம் வைத்துக்கொள்ளாமல் பொறுப்புணர்வுடனும் நேர்மையுடனும் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
பின்னர் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் ரூ.15,000 பணம் அதன் உரிய உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகி வரும் நிலையிலும், தனக்குக் கிடைத்த பணத்தை உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மாணவி மேற்கொண்ட இந்த நேர்மையான செயல், அக்கரப்பத்தனைப் பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
“அடுத்தவர் காசு நமக்கு வேண்டாம்” என்ற எண்ணத்தை செயலால் வெளிப்படுத்திய இந்த மாணவி, இளம் தலைமுறையினருக்கு நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார்.
மாணவிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

.jpeg
)





கருத்துகள் இல்லை