மத்திய வங்கியின் அறிவிப்பு!!
இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்களை உள்ளடக்கிய புதிய பட்டியலை இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ளது.
இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டு, அதனை நடத்தி விளம்பரப்படுத்தியதாக ‘TM App’ என்ற செயலி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விசாரணை, 1988 ஆம் ஆண்டின் 30-ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் (திருத்தப்பட்டபடி) 83C பிரிவின்படி நடத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை 26 நிறுவனங்கள் அல்லது செயலிகள் “TM App’ ”யுடன் இணைந்து தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை இயக்கியுள்ளன.
இதனையடுத்து, வங்கிச்சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட நிதித்திட்டங்களை நடத்தும் நிறுவனங்கள் மற்றும் செயலிகளின் பட்டியலில் ‘TM App’ செயலியும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறான தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில், இலங்கை மத்திய வங்கியின் நிதி நுகர்வோர் உறவுகள் திணைக்களத்தினால் இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எனவே முதலீடுகளை செய்வதற்கு முன்னர் பொர்மக்கள் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை