சிறப்பாக இடம்பெறும் யாழ். உணவுத் திருவிழா!!


யாழ்ப்பாணத்தின் தனித்துவமான உணவு மற்றும் கலாசார பாரம்பரியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் “யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத் திருவிழா” முற்றவெளி மைதானத்தில் மூன்றாவது நாளாகவும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

வட மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இத்திருவிழாவில் பாரம்பரிய உணவுகள், கைவினைப் பொருட்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

விழாவை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவுகளின் சுவையை அனுபவிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அழைத்ததுடன், இந்நிகழ்வு வடக்கின் சுற்றுலாத்துறையில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வாய்ப்பாகவும் அமைகிறது எனத் தெரிவித்தார்.

விழாவில் றீ(ச்)ஷா நிறுவனத்தின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பெருமளவான மக்கள் பங்கேற்றுள்ள இத்திருவிழா காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.