யாழில் மாணவன் உயிரிழப்பு!!


யாழ்ப்பாணத்தில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 19 வயதுடைய மாணவன் ஒருவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அரசடி வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன், கடந்த 10ஆம் திகதி உயிரியல் பிரிவின் இரண்டாவது நாள் பரீட்சைக்குத் தோற்றியபோது திடீரென மயக்கமடைந்துள்ளார்.

இதையடுத்து அவரது பெற்றோர் வரவழைக்கப்பட்டு, மாணவன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சிகிச்சையின் பின்னர் அவர் வீடு திரும்பியுள்ளார். பின்னர் கடந்த 12ஆம் திகதியும் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மீண்டும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று (16) இரவு உணவு அருந்திய பின்னர் அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவனின் மரணம் தொடர்பான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வி. அன்ரலா மேற்கொண்டுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனையின் போதும் மரணத்திற்கான காரணம் உறுதியாக கண்டறியப்படாத நிலையில், மேலதிக பரிசோதனைகளுக்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.