அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!!
ஜெர்மனியின் முனிச் விமான நிலையத்திலிருந்து ஹனோய் நோக்கிப் புறப்பட்ட வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானமொன்று சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் திருப்பியனுப்பப்பட்டு தரையிறக்கப்பட்டுள்ளது.
போயிங் 787 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானம் டேக்-ஓஃப் செய்யப்பட்ட போது ரன்வே எல்லை கடந்து சென்றதால், விமானத்தின் பின்னால் அதிகளவில் தூசிப் படலம் எழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக காற்றில் இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிகமாகச் சுற்றித் திரிந்து எரிபொருளை வீணடித்த பின்னரே விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.
தரையிறங்கிய பின்னர் விமானம் வடக்கு ரன்வேயில் நகர்ந்து செல்ல முடியாமல் சிக்கியதால், அவ்வழியான விமானப் போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டு தெற்கு ரன்வேக்கு மாற்றப்பட்டது.
இச்சம்பவத்தின் போது பயணிகள் மற்றும் விமானப் பணிக்குழாமினர் அனைவரும் பாதுகாப்பாக இருந்ததாக அறிவித்துள்ளதுடன், துல்லியமான காரணத்தைக் கண்டறிய உரிய அதிகாரிகளுடன் இணைந்து சோதனைகளை மேற்கொண்டு வருவதாக வியட்நாம் ஏர்லைன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை