மாயமான பொலிஸ் அதிகாரி!!
தங்காலை - கிரிந்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கடந்த சில நாட்களாக காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிரிந்த அருகே தெபரவெவ பிரதேசத்தில் வசித்து வந்த 43 வயதுடைய பொலிஸ் சார்ஜண்ட் ஒருவரே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 23 ஆம் திகதி அதிகாலையில் தனது வீட்டில் இருந்து கடமைக்காக புறப்பட்டுச்சென்ற அவர், அதன் பின்னர் காணாமல்போயுள்ளார்.
அவரைப் பற்றி இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும் கிரிந்த பொலிஸ் நிலையத்தில் தற்போது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணாமல்போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தரை தேடிக் கண்டறியும் வகையில் கிரிந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை