யுவதியை கடத்திய காதலன்!!
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற 26 வயதான யுவதியொருவரை அவரது காதலன் கடத்திச்சென்ற சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது யுவதியை கடத்திச்சென்ற காதலனின் காரை நாரஹேன்பிட்டி பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி நிறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அந்த இளம் யுவதியை கடத்த முயன்றவர், அப்பெண்ணின் காதலரே என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை (29) பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் யுவதி ஒருவர் காரில் கடத்திச் செல்லப்படுவதாக பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது..
இந்த தகவலின் அடிப்படையில் நாரஹேன்பிட்டி பொலிஸார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நாரஹேன்பிட்டியிலிருந்து நாவல நோக்கிப் பயணித்த காரை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்ட போதிலும், சாரதி அதனை நிறுத்தாமல் தொடர்ந்து செலுத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், உத்தரவையும் மீறி கார் தொடர்ந்து சென்றதால், பொலிஸார் காரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி அதனை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்போது காரை செலுத்திய நபர் வாகனத்தை கைவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்ற நிழலயில், பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், காருக்குள் 26 வயதான யுவதி ஒருவர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை