வயலும் வாழ்வும்!!
நீலவானத்தில்
நீர் பரப்பி
மறைகிறது
நிலவொளி.
குளிரோடு வந்த
கூதலுக்கு
தளிர்ச்சாமரம் வீசுகிறது
வெள்ளிக்கம்பிகள்.
புல் நுனிகளில்
பூத்திருக்கிற
நீர்ச்சுனைகளில்
பிறக்கிறது ஓவியங்கள்.
தாய் நிலத்தை
தடவி மகிழ்கிறது
விதைத்தவனின்
கைகள்.
பச்சை உடுத்திய
பாரெங்கும்
மின்மினிகள்
கூச்சலிடுகின்றன.
மலராத மலரொன்றின்
மகரந்த வாசனையில்
உயிர்த்து முகிழ்கிறது
ஊதா நிற பட்டுப்பூச்சி...
கோபிகை.

.jpeg
)





கருத்துகள் இல்லை