சினிமா பாணியில் திட்டமிட்ட சிரான் பாஷிக்!!




 துபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாஷிக், பொலிஸாரிடம் இருந்து தப்பிப்பதற்காகச் சினிமா பாணியில் தீட்டிய மாபெரும் திட்டம் விமானம் மாறியதால் கைநழுவிப் போயுள்ளதாக   திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஷிரான் பாஷிக் தன்னை மாதிரியே உருவ அமைப்பைக் கொண்ட வேறு ஒரு நபரைத் தயார் செய்து, தான் பயணிக்கும் அதே விமானத்தில் இலங்கைக்கு அழைத்து வரத் திட்டமிட்டிருந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து உண்மையான ஷிரான் பாஷிக்குக்குப் பதிலாக அந்த போலி நபர் பொலிஸாரிடம் சரணடைந்து கைதாவது போலவும், அந்த இடைவெளியில் உண்மையான ஷிரான் பாஷிக் தப்பிப்பது போலவும் திட்டம் தீட்டப்பட்டிருந்தது

போலி நபர் பிடிபடும் நேரத்தில், உண்மையான ஷிரான் பாஷிக் வேறு ஒரு வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி விமான நிலையத்திலிருந்து வெளியேறி, ஐரோப்பிய நாடு ஒன்றுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.

இதற்காக அவர் பெருந்தொகை பணத்தைச் செலவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துபாய் பொலிஸார் ஷிரான் பாஷிக்கை நாடு கடத்துவது குறித்து இலங்கை பொலிஸாருக்கு அதிகாரப்பூர்வமாக எவ்வித அறிவிப்பும் வழங்கியிருக்கவில்லை

எனினும், துபாயில் உள்ள ஒற்றர் ஒருவர் மூலம் இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.