ஷிரான் பாஷிக் இடம் விசாரணை!!

 



முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்கின்,  நடவடிக்கைகள் குறித்த விசாரணைகள் தொடர்வதால், 90 நாட்கள் காவலில் வைக்க மத்திய குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CCID) அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.


தெஹிவளையைச் சேர்ந்த 48 வயதான ஷிரான் பாசிக், கடந்த மார்ச் மாதம் துபாயில் கைது செய்யப்பட்டு, ஒகஸ்ட் 14 அன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

குற்றப் புலனாய்வுத் துறையின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர் காவலில் எடுக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக CCIDயிடம் ஒப்படைக்கப்பட்டார்.


ஊடக அறிக்கைகளின்படி, விசாரணையின் போது, ​​ஈரான் அமீரகத்தின் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், துபாயில் உள்ள ஒரு ஆடம்பர வணிக வளாகத்தில் இருந்தபோது, ​​அங்குள்ள பொலிஸார் தன்னைச் சோதனையிட்டதாக விசாரணைகளில் குறிப்பிட்டுள்ளார்.

துபாய் பொலிஸார் தனது கைபேசியை ஆய்வு செய்து, ஈரான் தாக்குதல்கள் தொடர்பான படங்களைக் கண்டறிந்ததாகவும், அதுவே தனது கைதுக்கு வழிவகுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் நாடு கடத்தப்படும் வரை, ஈரானுடனான சாத்தியமான தொடர்புகள் குறித்து துபாய் பொலிஸார் தன்னிடம் தினமும் விசாரித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.