போக்குவரத்து நேர அட்டவணயிடும் பணியில் பெண்கள்!!
வரலாற்றில் முதன்முறையாக தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் அட்டவணையிடும் அதிகாரிகளாக இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இப்பணியிடங்களுக்காகப் புதிதாக நியமிக்கப்பட்ட 18 அதிகாரிகளில் இவர்களும் அடங்குவர்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், புதிதாகப் பணியமர்த்தப்பட்ட திட்டமிடல் அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்குவதற்காக நடைபெற்ற நியமன விழாவில் இவர்களுக்கான நியமனங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால, பணிப்பாளர் நாயகம், சபையின் உறுப்பினர்கள் மற்றும் பிற அதிகாரிகள் இவ்விழாவில் கலந்துகொண்டார்.
இந்த நியமனங்கள் திட்டமிடல் செயல்பாடுகளை வலுப்படுத்தி, பொதுப் போக்குவரத்து சேவைகளின் திறமையான நிர்வாகத்திற்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.jpeg
)





கருத்துகள் இல்லை