வரி வசூலிப்பு குறித்த அறிவிப்பு!!

 



இலங்கை அரசால் வசூலிக்கப்படக்கூடிய 961.4 பில்லியன் ரூபாய் வரிப்பணத்தினை வசூலிக்க முடியாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


2024 ஜூன் 30 நிலவரப்படி, இறைவரித்திணைக்களத்தினால் வசூலிக்க முடியாத வரி, அபராதம் மற்றும் வட்டியின் மொத்த தொகை ரூ. 961.4 பில்லியன் ரூபாய் என தணிக்கை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

2024 ஜூன் 30 நிலவரப்படி, வருமான வரியில் அதிகபட்ச வரி நிலுவை உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய, அடுத்த அதிகபட்ச வரி நிலுவை மதிப்புக்கூட்டு வரியில் (VAT) உள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

2023 ஜூன் 30 மற்றும் 2024 ஜூன் 30க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும், வரி நிலுவை, அபராதம் மற்றும் வட்டி ஆகியவை ரூ. 18 பில்லியனுக்கும் அதிகமாகவும் அதிகரித்துள்ளன.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.