வவுனியா PickMe சாரதிக்கு கொலை அச்சுறுத்தல்!


வவுனியாவில் PickMe சேவையில் ஈடுபட்டு வரும் சாரதி ஒருவருக்கு எதிராக முச்சக்கரவண்டி சங்க உறுப்பினர்கள் எனக் கூறப்படும் சிலரால் மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


எந்தவொரு தொழிலாளருக்கும் எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலோ அல்லது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலோ செயல்படுவது சட்டவிரோதமானதுடன், கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும்.


நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சட்டபூர்வமாக சேவையாற்றும் சாரதிகளின் பாதுகாப்பும், அவர்களின் வாழ்வாதாரமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.


இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு, அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் நபர்கள் தொடர்பில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட சாரதியின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.


சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்பட்டு, அனைத்து தரப்பினரும் அச்சமின்றி தமது தொழிலை மேற்கொள்ளக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.