மீண்டும் அரகலய போராட்டமா!!

 



இலங்கையின் அடுத்தகட்ட அரகலய அல்லது மக்கள் போராட்டம் சிறைச்சாலை அமைப்பை மையமாகக் கொண்டு தொடங்குவதற்கான தீவிர அபாயம் நிலவுவதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.


சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான இடநெருக்கடி மற்றும் அங்குள்ள சீர்கேடுகள் குறித்து  கருத்து கூறும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய முறையில் தீர்வு காணத் தவறினால், நாட்டின் அடுத்தகட்ட மக்கள் போராட்டத்தின் (அரகலய) ஆரம்பப் புள்ளியாக அதுவே அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தத்தைக் கடுமையாக விமர்சித்த மைத்திரி குணரத்ன, ஏனைய அரசு ஊழியர்களுக்கு இல்லாத ஒரு சிறப்புச் சலுகையை நீதிபதிகளுக்கு மட்டும் வழங்குவது நியாயமற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.