போதைப்பொருள் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை!!
போதைப்பொருட்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (10) நடைபெற்ற “ரதம ஏகத” தேசிய செயல்பாடுகள் ஆணைய கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது.
இதன்போது, போதைப்பொருள் கடத்தல் மற்றும் அது தொடர்பான குற்றச் செயல்கள் பொருளாதாரம், சுற்றுலாத் துறை மற்றும் சமூகச் சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதுடன்
போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்த வலுவான சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தேவை என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

.jpeg
)





கருத்துகள் இல்லை