முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!!
தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு எதிராக வலிவடக்கு பிரதேச சபைக்கு எதிராக பொலிசார் தொடர்ந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு, வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சுகிர்தன் , செயலாளர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இன்று நீதிமன்றத்தில் வலிகாமம் பிரதேச சபையின் உத்தியோகபூர்வ சட்டத்தரணி சத்தியநாதன் கஜேந்திரன் பிரசன்னமாகியிருந்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி மேற்படி வீதியை பிரதேச சபை திறப்பதை பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கை என்ற பெயரில் பொலிஸார் இனித் தடுக்க முடியாது என்று சட்ட நிலைமை ஏற்பட்டுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை