வெளிநாடொன்றில் நடந்த துயரம்!!

 



ஸ்வீடனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் வாள் ஏந்திய நபர் ஒருவர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதுடன், சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


பாகெர்ஸ்டா பகுதியில் அமைந்துள்ள பிரினெல்ஸ்கோலன் என்ற உயர் பாடசாலைக்கே இன்று(21.8.2026) பிற்பகல் வேளையில் புகுந்த தாக்குதல்தாரி, அங்கிருந்தவர்கள் மீது இந்த வாள் வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த பொலிஸார், சந்தேகநபரை சுட்டு வீழ்த்தித் தடுத்து நிறுத்தியதுடன் அவரைக் கைது செய்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை

எனினும், பாதுகாப்பு நிமித்தம் அப்பகுதியிலுள்ள ஏனைய பாடசாலைகளும் உடனடியாக பூட்டப்பட்டு தீவிர சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ள நிலையில், நிலைமையை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அந்நாட்டின் நீதி அமைச்சர் தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.