பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுக்க முயன்றவனை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்.!
கடுவெல, ஹேவாகம பகுதியில் உள்ள ஜயவிக்ரம எண்ணெய் கடையில் நேற்று (20) காலை சுமார் 10.10 மணியளவில் தங்கச் சங்கிலி கொள்ளையடிக்க முயற்சி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர், கடை உரிமையாளரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிப்பதற்காக மிளகாய்த்தூள் அடங்கிய பையுடன் வந்ததாக கூறப்படுகிறது.
உரிமையாளரின் மீது மிளகாய்த்தூளைத் தூவி, தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றபோது, அவர் அங்கிருந்தவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, குறித்த நபர் அங்கிருந்தவர்களால் தா**க்**கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது.
#BreakingNews #PublicNews #SriLanka #SriLankaNews #Colombo #LocalNews #LiveUpdates #செய்திகள் #SriLankaTamilNews #JaffnaNews

.jpeg
)





கருத்துகள் இல்லை