முதுன் கால்வாய் மழைநீர் வடிகால் மற்றும் சுற்றாடல் மேம்பாட்டுத் திட்டம்!

 


ரூ. 46,190 மில்லியன் செலவில் 

முதுன் கால்வாய் மழைநீர் வடிகால் 

மற்றும் சுற்றாடல் மேம்பாட்டுத் திட்டம்

- பேலியகொடை மற்றும் களனிப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்த 10 ஆண்டுகால பாரிய திட்டம்


பேலியகொடை மற்றும் களனிப் பகுதிகளில் ஏற்படும் கடுமையான மழைநீர் வடிகால் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவும் சுற்றாடலை மேம்படுத்தவும் 'முதுன் கால்வாய் (Mudun Ela) மழைநீர் வடிகால் மற்றும் சுற்றாடல் மேம்பாட்டுத் திட்டம்' ஆரம்பிக்கப்படவுள்ளது. 


2023 இல் ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (JICA) மற்றும் 2024 இல் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் (SLLDC) நடத்திய சாத்தியக்கூறு ஆய்வுகளின் அடிப்படையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 


ரூ. 46,190.6 மில்லியன் மதிப்பீட்டுச் செலவில் 2027-2036 காலப்பகுதியில் கட்டம்பக்கமாக அமுல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் வெள்ளப் பாதிப்புகள் தடுக்கப்பட்டு, எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்கான காணிகள் விடுவிக்கப்படும். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


#MudunEla #CleanSriLanka #SriLanka #FloodControl #DrainageDevelopment #UrbanDevelopment #Kelaniya #Peliyagoda #JICA #SLLDC #Environment #CabinetDecisions #CabinetApproval #Cabinet  #SriLanka #LKA #SL

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.