நிலச்சரிவு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!
10 பிரதேச செயலக மக்கள் அவதானம்
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் கொழும்பு, களுத்துறை, கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நிலை 1 மஞ்சள் (Level 1 - Yellow Alert)நிலச்சரிவு விழிப்புணர்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிக மழையுடனான நிலையை அடுத்து இன்று (15) காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த நிலச்சரிவு எச்சரிக்கை அறிவிப்பானது, நாளை (16) காலை 10.00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நிலச்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவுகள் பின்வருமாறு:
கொழும்பு மாவட்டம்:
சீதாவாக்கை
கேகாலை மாவட்டம்:
வரகாப்பொல
ருவன்வெல்ல
களுத்துறை மாவட்டம்:
தொடங்கொட
புள்த்சிங்கள
பேருவளை
இங்கிரிய, மத்துகம
பாலிந்தநுவர
வலல்லாவிட்ட
குறிப்பிட்ட இந்தப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மற்றும் மலைப்பாங்கான வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள், நிலச்சரிவு, பாறைகள் சரிந்து வீழ்தல், மண்மேடுகள் இடிந்து வீழ்தல் போன்ற ஆபத்து அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் இது குறித்து விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
#LandslideWarning #NBRO #YellowAlert #Colombo #Kalutara #Kegalle #SriLankaWeather #Seethawaka #Warakapola #Ruwanwella #Dodangoda #Beruwala #Bulathsinhala #LKA #SafetyFirst #DisasterManagement #SriLanka #SL

.jpeg
)





கருத்துகள் இல்லை