தியாக வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் புனிதப் பயணம்!
தியாக தீபம் திலீபன் அவர்களின் 39 ஆவது நினைவேந்தலை முன்னிட்டு, அவரது தியாக வரலாற்றை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் #நினைவூர்திப்பவனி தற்போது வடமாகாண நிலப்பரப்பை வந்தடைந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.
வடக்கில் இன்று உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊர்திப் பவனி, #கனகராஜன்குளம் பகுதியில் மக்களின் சுடரஞ்சலியோடும் வீரவணக்கத்தோடும் எழுச்சியாக நகர்ந்து கொண்டிருக்கின்றது.
எதிர்வரும் 26.09.2026 அன்று நல்லூர் நினைவாலயத்தைச் சென்றடையும் வரை தாயக மண்ணெங்கும் பயணிக்கும் இந்த நினைவூர்திக்கு, மக்கள் வழியெங்கும் ஒன்றுதிரண்டு தங்கள் உணர்வுபூர்வமான அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.
📍 தற்போதைய இடம்: கனகராஜன்குளம்
🏁 இறுதி இலக்கு: நல்லூர் தியாக தீபம் திலீபன் நினைவாலயம், யாழ்ப்பாணம் (26.09.2026)
🗓️ தேதி: 20.09.2026
News report ப. பிரகலாதன்






















.jpeg
)





கருத்துகள் இல்லை