தேசிய ஊடகத்தின் பிராந்திய செய்தியாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
போதைக்கு எதிராக விழிப்புணர்வு செய்த தேசிய ஊடகத்தின் பிராந்திய செய்தியாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பும், கைது செய்யப்பட்ட குறித்த நபர் போதைப்பொருள் விற்பனை செய்தார் என்ற விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தார்.
இருந்தும் குறித்த ஊடக நிறுவனம் அவர் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆனால் கடந்த காலத்தில் இடம்பெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்ற போராட்டத்தில் கலந்துகொண்டார்கள் என இரண்டு பிராந்திய செய்தியாளர்களை நீக்கினார்கள், பின்னர் அது தொடர்பில் நான் முன்பு பணியாற்றிய ஊடகமொன்றில் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், நான் வெளியிட்ட செய்தியை நீக்குங்கள் உங்களை மீண்டும் வேலைக்கு சேர்க்கிறோம் என்று சொல்லி, பின்னர் நான் பணியாற்றிய ஊடக நிறுவனத்துடன் , அந்த பிராந்திய செய்தியாளர்கள் பேசி, எனக்கு தெரியாமலேயே செய்தியை நீங்க வைத்ததை தொடர்ந்து மீண்டும் அவர்கள் அந்த நிறுவனத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டார்கள்.
இப்படியெல்லாம் செய்தவர்கள், குறித்த நபர் தொடர்பான விடயத்தில், முன்பே போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டை பலர் முன் வைத்தபோதும் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளனரா அல்லது அந்த நிறுவனத்தின் முகாமையாளர் உள்ளிட்டவர்கள் யாழ்ப்பாணம் வரும் போது திராட்சைப்பழம் வாங்கி கொடுப்பதால் விட்டுவிட்டார்களா?
அந்த நிறுவனத்தின் முகாமையாளர்கள் உள்ளிட்டவர்கள் வடக்கிற்கு வரும் போது, இங்கு இருக்கும் பிராந்திய செய்தியாளர்களிடம், கருவாடு, ஒடியல், காட்டிறைச்சி வத்தல், பழங்கள் உள்ளிட்டவற்றை வாங்கி செல்வார்கள்.
பின்பு இவ்வாறு பொருட்கள் கொடுக்கின்ற பிராந்திய செய்தியாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள், இவர்களுக்காக நேர்மையான பிராந்திய செய்தியாளர்களை பழிவாங்குவார்கள், இதனால் பலர் அந்த நிறுவனத்தில் இருந்து விலகிவிட்டார்கள்.

.jpeg
)





கருத்துகள் இல்லை