வடமராட்சி வடக்கு பண்பாட்டு பெருவிழா!!
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய வடமராட்சி வடக்கு பண்பாட்டுப் பெருவிழா இன்று புதன்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் வல்வை முத்துமாரிஅம்மன் ஆலய திருமண மண்டபத்தில்
வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ந.திருலிங்கநாதன் தலைமையில் ஆரம்பமானது.
![]() |
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க பண்பாட்டு ஊர்வலத்துடன் விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு அங்கு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
நாடகச் சக்கரவர்த்தி
பரஞ்சோதி பரராஜசிங்கம் (பப்பா) அரங்கில் இடம்பெற்ற நிகழ்வுகளில் தொடர்ந்து சி.கிருஷ்ணாகரன் குழுவினரின் வாத்தியச் சங்கமம் இடம்பெற்றது.
அரங்கத்திறப்புரையினை வடமராட்சி வடக்கு கலாசார பேரவை உறுப்பினர் கு.ரவீந்திரன் நிகழ்த்தியதை தொடர்ந்து
நெடியகாடு பரதசுரபி கலைமன்றத்தின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. வரவேற்புரையினை வடமராட்சி வடக்கு உதவி பிரதேச செயலர் ம.ப.தயானந்தன் நிகழ்த்தியதை தொடர்ந்து
அபிநய கலாகேத்ரா நடனாலயத்தின் சிவதாண்டவ கௌத்துவம் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து தலைமையுரையினை நிகழ்வின் தலைவரும் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளருமான ந.திருலிங்கநாதன் நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து பொலிகை இசைக்கோயில் வெளியீட்டகத்தின்
உடுக்கிசைப்பாடல் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து கருந்துரைகளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் மாலினி கிருஷ்ணானந்தன், பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கவிஞரும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளருமான இ.த.ஜெயசீலன் உட்பட பலரும் நிகழ்த்தினர்
அதனை தொடர்ந்து ஞானசம்பந்தர் கலைமன்றத்தின் சக்திகூத்தும்,
கற்கோவளம் வேணுகானசாபா கலை மன்றத்தின் கூத்திசைப் பாடல்களும், இடம்பெற்றதனை தொடர்ந்து போட்டிகளில் வெற்றியீட்டியோருக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கபட்டனர். அதனை தொடர்ந்து கண்ணதாசன் குழுவினரின் சத்தியவான் சாவித்திரி இசை நாடகம் இடம்பெற்றதனை தொடர்ந்து தம்பையா ஐயர் கண்ணதாசன், காத்தமுத்து ஞானவேல், இராசேந்திரம் மதியழகன் ஆகியோரக்கு கலைபருத்தி விருதுகளும், மதியழகன் லக்ஸ்மன் திருமதி.நித்தியா சுவர்மன் ஆகியோருக்கு இளங்கலைஞர் விருதுகளும், திருமதி. செந்தூரன் அருந்ததி அவர்களுக்கு இளங்கலைப்பரிதி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இன்றைய இந் நிகழ்வில் மூத்த கலைஞர்களான வல்வை ந.அனந்தராஷ்,
வே.கார்த்திகேசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும, வடமராட்சி வடக்கு பிரதேச கலாசார பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், கலைஞர்கள், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பிரதேச வாசிகள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.




.jpeg
)





கருத்துகள் இல்லை