தியாக தீபம் திலீபன் சதுக்கம் அங்குரார்ப்பணம்!!
தியாக தீபம் திலீபனின் நினைவுகளைப் பாதுகாத்து ஆவணப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ‘தியாக தீபம் திலீபன் சதுக்கம்’ அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (21) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
நல்லூர் தியாக தீபம் நினைவாலயத்திற்கு முன்பாக இன்று மாலை 7 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
“வரலாற்றுச் சம்பவங்களையும் நினைவுகளையும் ஆவணப்படுத்தும் நிகழ்வு” என்ற தொனிப்பொருளில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
தலைமுறைகள் கடந்தும் வரலாற்றில் நினைவுகூரப்படும் தியாக தீபம் திலீபனின் நினைவுகளைப் பாதுகாப்பதுடன், அவரது காலப்பகுதியுடன் தொடர்புடைய வரலாற்றுச் சம்பவங்களையும் நினைவுகளையும் ஆவணப்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தியாக தீபம் திலீபன் ஆவணக்காப்பகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை