மக்களுக்கான அபிவிருத்தி தொடர்பில் கலைச்செல்வி எம். பி. கருத்து!!
மலையக மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பல அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும், அவை தொடர்பில் பெரிதாகப் பேசப்படுவதில்லை என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.
மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த இரண்டு வருட காலப்பகுதியில் இனவாதம், குலவாதம், மதவாதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு, அனைத்து மக்களையும் சமமாக ஏற்றுக்கொண்டு, மக்களின் பிரதிநிதிகளையும் தலைவர்களையும் மதிக்கும் அரசாங்கம் உருவாகியுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான நிதி போதியளவில் ஒதுக்கப்பட்டு வருகின்றது.
மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
மலையகப் பகுதிகளிலும் கல்வி, வீடமைப்பு, காணி உரிமை, வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எமது அரசாங்கத்தின் நோக்கம் வெறுமனே விளம்பரங்களை மேற்கொள்வது அல்ல. மக்களின் உண்மையான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு காண்பதுடன், அவர்களின் வாழ்க்கையில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்.
சட்டத்திலிருந்து எவராலும் தப்பிக்க முடியாது என்பதை நாம் நடைமுறையிலேயே எடுத்துக்காட்டியுள்ளோம். மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளையும், நாட்டில் சட்டத்தின் ஆட்சியையும் ஒரே நேரத்தில் உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை