திலீபம் - கோபிகை!!
பச்சயம் பூசிய
இரவுகளில்
படர்ந்து கிடக்கிறது
கருந்துளையின் காரீயங்கள்
ஊமைப்பாடலுக்கு
உருவம் கொடுக்கிறான்
ஊர் துறந்த
தேசாந்திரி
காடும் சுனையுமான
கனவுகளுக்குள்
ஏகாந்தம் இசைக்கிறது
ஏதிலியின் ஓலம்
தாயற்ற குழந்தையின்
தவிப்புக்குள்
வந்து வெடிக்கின்றன
சன்னச் சிதறல்கள்
ஊதாக்கனவுகளை
உடைத்து எறிகிறது
செருக்குப் பிடித்த
சிங்கத்தின் கர்ஜனை.
காலம் கீறிய கோட்டில்
அகிம்சையால்
கோலமிடுகிறான்
நெருப்பின் நாயகன்....
கோபிகை

.jpeg
)





கருத்துகள் இல்லை